இந்திய திரை உலகின் ஈடுஇணையற்ற உச்ச நட்சத்திர நடிகராக கடந்த 47 ஆண்டுகளாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவரது திரையுலக சாதனைகளின் மணிமகுடமாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டாருக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதையும் கவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் இன்றும் பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளை புரிந்து வருகின்றன. அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்டத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்த சில தினங்களில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக ரஜினிகாந்த் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது திரைப்பயணத்தில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கொண்டாடும் வகையில், ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Our lovely Jilluma .. Appa’s greatest fan and the superstar of our family 💫💫💜💜☺️☺️🤗🤗🥰 @OfficialLathaRK @rajinikanth @ash_rajinikanth pic.twitter.com/ccxVeoWRMW

— soundarya rajnikanth (@soundaryaarajni) August 16, 2022

47 years of pure magic !!! 💫💫💫 you are gods child dearest appa !!!! You are an emotion that words cannot explain !!!
Love you Thalaivaaa 💜💜💜🙏🏼🙏🏼🙏🏻 #47YearsOfRajinism pic.twitter.com/b4bzmcYLzz

— soundarya rajnikanth (@soundaryaarajni) August 15, 2022