ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க, கடைசியாக ஹாலிவுட்டில் வெளிவந்த தி கிரே மேன் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. தி கிரே மேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் இதன் 2-வது பாகத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி(SIR) திரைப்படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் Life Of பழம் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. அட்டகாசமான அந்த பாடல் இதோ…