ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் மிக பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தொடரந்து இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. முன்னதாக பருத்திவீரன் & கொம்பன் படங்களின் வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன்  திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, இளவரசு, வடிவுகரசி, R.K.சுரேஷ், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்திற்கு, செல்வக்குமார்.S.K ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விருமன் திரைப்படத்திலிருந்து வானம் கிடுகிடுங்க வீடியோ பாடல் தற்போது வெளியானது. அசத்தலான வானம் கிடுகிடுங்க வீடியோ பாடல் இதோ…