எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்னத்தின் மிக பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன. 

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். 

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 
இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

உலகின் பல்வேறு மொழிகளிலும் ரிலீஸாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது IMAX தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. IMAX தொழில்நுட்பத்தில் ரிலீசாகும் முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Grand gets Grander!

Experience #PS1 in IMAX, the first Tamil film to come out in IMAX
In theatres on 30th September!#PonniyinSelvan #ManiRatnam #ARRahman @LycaProductions @arrahman @tipsofficial @IMAX pic.twitter.com/jrCduKMgPH

— Madras Talkies (@MadrasTalkies_) August 16, 2022