தமிழ் சினிமாவின் ஏராளமான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகர்களில் ஒருவராக அசத்தி வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் வெளியானது மூன்றாவது போஸ்டர் மாலை வெளியாகவுள்ளது.இன்று விஜயின் பிறந்தநாள் 48ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள குஷ்பூ விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்,இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.