சிறந்த நடிகராக தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடிகர் மாதவன் ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் முதல்முறை இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு திரைப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். 

மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, ராக்கெட்ரி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இதுவரை ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்து அனைவரும் தங்களது மேலான பாராட்டுகளை வழங்கி வரும் நிலையில், முன்னதாக சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கௌரவித்தனர். இந்நிலையில் ராக்கெட்ரி திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

NEW POSTER “A LOT OF IMPERFECT PEOPLE TRYING TO MAKE A PERFECT WORLD” . #Rocketrythefilm 🚀🚀 The story of a great scientist, a true patriot, who was turned into a villain in the blink of an eye.
RELEASING JULY 1st. pic.twitter.com/8SRvRO5oZH

— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 20, 2022