இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக சிறந்த நடிகையாகவும் வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாணிக் காயிதம் & சர்க்காரு வாரி பாட்டா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பர் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.தொடர்ந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து மலையாளத்தில் நடித்துள்ள வாஷி திரைப்படம் கடந்த ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஜி.சுரேஷ் குமார் நிறுவனம் சார்பில் மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ள வாஷி திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ளார். 

வாஷி திரைப்படத்திற்கு ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வாஷி திரைப்படத்திலிருந்து தற்போது ஹே கண்மணி வீடியோ பாடல் வெளியானது. வாஷி படத்தின் அசத்தலான கண்மணி வீடியோ பாடல் இதோ…