உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.கமல் என்னும் மஹாநடிகனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மலையாளத்தின் முன்னணி நடிகர் ஃபஹத் பாசில் என மேலும் இரண்டு அசத்தலான நடிகர்கள் இணைந்ததால் படத்தின் ஆரம்பம் முதலே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் தமிழ்சினிமாவின் அசத்தல் நடிகர்களில் ஒருவரான சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.சூர்யாவும் இந்த படத்தில் இணைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.

இந்த படம் மிக பிரம்மாண்டமாக ஜூன் 3 இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் குறித்து லோகேஷ் ஒரு பதிவிட்டுள்ளார்.பட ரிலீசுக்கு முன் இதுவரை நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை,சிறுவயதில் இருந்தே கமலின் தீவிர ரசிகராக இருந்து அவரை இயக்கியது இன்றும் கனவு போல உள்ளது.

இந்த படத்தினை வெற்றிகரமாக முடித்த வெளியிட உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்த லோகேஷ்.விக்ரம் படத்தினை பார்க்கும் முன் அவரது இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கைதி படத்தினை ஒருமுறை பார்க்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.விக்ரம் படத்தில் கைதி படத்தின் பல கதாபாத்திரங்கள் வரும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில படங்களை போல இரு வேறு கதைகள் இணைவது போல இந்த படத்தில் லோகேஷ் ஒரு கதைக்களத்தை கையாண்டுள்ளார்.இதற்காக ரசிகர்களை படம் பார்க்கும் முன் ஒரு முறை கைதி படத்தினை பார்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.படம் ரிலீசாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இரு உலகங்களை இணைக்கும் லோகேஷின் கதைகளையும் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்த்துள்ளனர்.லோகேஷின் அறிக்கையை கீழே உள்ள லிங்கில் காணலாம்