தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அசத்தி வருபவர் அனிருத் ரவிச்சந்தர்.2012-ல் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் அடுத்து தொட்டதெல்லாம் ஹிட் தான்.இவர் அடுத்தடுத்து இசையமைத்த படங்கள் ஹிட் அடிக்க முன்னணி இசையமைப்பாளராக அவதரித்தார்.

பல ஹிட் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.ரஜினி,கமல்,விஜய்,அஜித்,தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி என தமிழின் முன்னணி நாயகர்களுக்கு தனது இசையால் சூப்பர்ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார் அனிருத்.

தெலுங்கிலும் பவன் கல்யாணின் Agnyaathavaasi படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் அனிருத்,அதற்கு அடுத்து நானியின் ஜெர்சி,கேங் லீடர் படங்களுக்கு இசையமைத்தார் தெலுங்கிலும் பாடல்கள் செம ஹிட் அடித்தன.அடுத்ததாக இவர் இசையமைத்த பல முக்கிய படங்கள் வெளிவரவுள்ளன.கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம் இன்று வெளியாகியுள்ளது.

செம பிஸியான இவர் இசையமைக்கும் படங்கள் அடுத்தடுத்து கடந்த சில மாதங்களாக வெளியாகி வந்தன.ஏப்ரல் முதல் ஜூன் வரை இவர் இசையமைத்த படங்கள் வரிசையாக வெளியாகின இதில் விஜயின் பீஸ்ட்,விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல்,சிவகார்த்திகேயனின் டான்,கமலின் விக்ரம் என நான்கு பெரிய படங்கள்.

இந்த படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேலைகளில் பிஸியாக இருந்த அனிருத்,தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், இந்த படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்தும் , விக்ரம் படத்திற்கும் அதே ஆதரவை தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் இது ஆரம்பம் தான் இன்னும் பல தூரங்கள் இந்த பயணம் ரசிகர்களின் ஆதரவோடு தொடரவேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.