தங்கையின் கள்ளக் காதலால் கடும் அதிர்ச்சியடைந்த அண்ணன் கண்டித்த நிலையில், அந்த அண்ணனையே கொலை செய்ய அந்த தங்கை கூலி படையை ஏவி விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சூர்யா என்ற இளைஞன், கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக அத்து மீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சூரியாவை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்து ஓடி உள்ளனர். 

இதனால், ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த சூர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சூரியாவை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சூர்யாவுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் போலீசார், குறிப்பிட்ட அந்த பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “சூர்யாவிற்கு வேறு எதும் முன் விரோதம் இருக்கிறதா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான சர்தார் மற்றும் அவரது நண்பர்களான 25 வயதான யோகராஜ், 24 வயதான கௌதம், 24 வயதான ரியாஸ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து உள்ளனர். 

இந்த 4 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், “இந்த 4 பேரும் தான், சூர்யாவை வீடு புகுந்து தாக்கி கொலை செய்ய முயன்றது” தெரிய வந்தது. 

மேலும், இவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் தங்களது பாணியில் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், “25 வயதான சர்தாருக்கும், சூர்யாவின் பெரியம்மா மகளான ஏற்கனவே திருமணமான 30 வயதான மனிஷாவிற்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு இருக்கிறது. 

சூர்யாவின் தங்கையான 30 வயதான மனிஷா, திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் தன்னைவிட 5 வயது குறைவான சர்தாருடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். 

இந்த விசயம், அந்த பெண்ணின் அண்ணனான சூர்யாவின் கவனத்திற்கு வந்த நிலையில், தனது தங்கை மனிஷாவை அழைத்து, நேரடியாக கண்டித்து இருக்கிறார். 

ஆனாலும், அந்த பெண் மனிஷாவால் தனது காதலை கை விட முடியாமல் தவித்து உள்ளார். 

இதனால், அண்ணன் சூர்யா, தன்னை கண்டித்ததை அந்த பெண் மனிஷா, தனது காதலன் சர்தாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

அத்துடன், “என் அண்ணன் சூர்யா உயிருடன் இருக்கும் வரை, நாம் ஒன்று சேர முடியாது” என்று அந்த கள்ளக் காதலனிடம் அழுது புலம்பி இருக்கிறார்.

இதனையடுத்து, கள்ளக் காதலியின் அண்ணன் சூர்யாவை கொலை செய்ய முடிவு செய்த கள்ளக் காதலன் சர்தார், தனது கூட்டாளிகளான  25 வயதான யோகராஜ், 24 வயதான கௌதம், 24 வயதான ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து, நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவை தாக்கி, அவரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பித்து” சென்றது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கள்ளக் காதலன் சர்தாரின் கொலை திட்டத்திற்கு உதவிய கள்ளக் காதலியான மனிஷா, அவரது சகோதரி சீமா தேவி அகியோரையும் போலீசார் கைது செய்ய அவர்கள் வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது, “என்னை பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக அழுது” ஆர்பாட்டம் செய்த அந்த பெண், “நான் விஷம் குடித்து விட்டதாகவும்” கூறி நாடமாகடி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மனிஷாவை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த மருத்துவப் பரிசோதனையில் மனிஷா, விஷம் எதுவும் குடிக்காமல் அவர் நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனால், இன்னம் ஆத்திரமடைந்த போலீசார், அந்த மருத்துவமனையில் வைத்தே மனிஷா, சீமா தேவி ஆகியோரை அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர், அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.