தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர். புரட்சித் தலைவர். மக்கள் திலகம். எம் ஜி ஆர் அவர்களின் அமைச்சரவையில் துணை அமைச்சராகவும் திகழ்ந்த ஐசரி வேலன் அவர்களின் மகனான Dr.ஐசரி.K.கணேஷ் அவர்கள் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ள Dr.ஐசரி.K.கணேஷ் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஆவார். தயாரிப்பாளராக தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தேவி, போகன், சம்டைம்ஸ், ஜூங்கா, LKG,  பப்பி, கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்களை Dr.ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் Dr.ஐசரி.K.கணேஷ் அவர்கள் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு.ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும் முன்னணி தயாரிப்பாளருமான Dr.ஐசரி.K.கணேஷ் அவர்களின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் அவர்கள் இன்று (ஜூலை 14) காலை 9.30 மணியளவில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

Dr.ஐசரி.K.கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் முன்னணி அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் திருமதி.புஷ்பா ஈஸ்வரி வேலன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Former Tamil Nadu Deputy Minister Amarar Mr. Ishari Velan's wife & Our Chairman Dr.@IshariKGanesh's mother Smt. Pushpa Ishari Velan (75) passed away today (14/07/2022) at 9:30 AM due to age factors.

Her last rites will be held tomorrow morning at 9 AM. pic.twitter.com/dHbHXUPqUd

— Vels Film International (@VelsFilmIntl) July 14, 2022