ஆண்ட்ரியாவின் பிசாசு 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | July 14, 2022 13:39 PM IST

தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பிசாசு 2.
முன்னதாக இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார்.
சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள பிசாசு 2 படத்திற்கு கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். பிசாசு 2 படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார். முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு முதற் கடவுள் விநாயகரின் ஆசியோடு விநாயகர் சதூர்த்தி ஆகஸ்ட் 31 அன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் #Pisasu2 #பிசாசு2 உலகமெங்கும் வெளியாகிறது.@DirectorMysskin @andrea_jeremiah @VijaySethuOffl
— RockFort Entertainment (@Rockfortent) July 13, 2022
@Lv_Sri @shamna_kkasim @kbsriram16 @SVC_official @KFilmFactory @saregamasouth pic.twitter.com/ePBiouWFwe