தென்னிந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நல்ல நடிகராக பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைத்து சினிமா ரசிகர்களின் மனதிலும் தனக்கென தனி இடம் பிடித்தவர். 

அந்த வகையில் லாரன்ஸின் ருத்ரன் மற்றும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தொடரந்து தளபதி விஜயின் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சரத்குமார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் மிக முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் மாதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஆழி படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150-வது திரைப்படமாக தயாராகிவருகிறது தி ஸ்மைல் மேன். இயக்குனர் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் உருவாகும் தி ஸ்மைல் மேன் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

மேக்னம் மூவிஸ் தயாரித்துள்ள தி ஸ்மைல் மேன் படத்தில் இனியா மற்றும் ஷியா ரோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் ஆனந்த் திரைக்கதை வசனங்கள் எழுத கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கும் தி ஸ்மைல் மேன் படத்திற்கு ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் சரத்குமார் அவர்களின் பிறந்த நாளான இன்று(ஜூலை 14) தி ஸ்மைல் மேன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

FirstLook of @realsarathkumar's #SupremeStar150th Movie #TheSmileMan#HBDSarathKumar Sir#Sarathkumaar150#MagnumMovies@sijaarose @IamIneya

💰 @magnum_movies
🙌 @SyamPraveen2
🎥@VikramMohan_DOP
📝@kamalaalchemis
🎼 @GavaskarAvinash
✂️ @Sanlokesh@teamaimpr pic.twitter.com/9VSRQmtAJW

— Team AIM (@teamaimpr) July 14, 2022