தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இயக்குனர் பார்த்திபன் அவர்களின் அடுத்த சாதனை முயற்சியாக தயாராகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக தயாராகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆர்தர்.A.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் & அகிரா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை V க்ரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.S.தாணு அவர்கள் வெளியிட நாளை, ஜூலை 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இரவின் நிழல் திரைப்படத்தில் பணியாற்றி உள்ளனர். 

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவு நிழல் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இரவின் நிழல் படத்தை பார்த்த முன்னணி நட்சத்திரங்களும் இயக்குனர் பெருமக்களும் படத்தை புகழ்ந்து வரும் நிலையில் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

முன்னதாக இரவின் நிழல் திரைப்படத்தை பாராட்டி பேசிய ரஜினிகாந்த் அவர்கள் படத்திற்கு முன்பாக 29 நிமிடங்கள் ஓடக்கூடிய மேக்கிங் வீடியோ காட்டப்படுவதாகவும், அது புல்லரிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மிகுந்த சிரத்தையோடு படமாக்கப்பட்டிருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவில் இருந்து தற்போது ஒரு SNEAK PEEK வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அசத்தலான இரவின் நிழல் படத்தின் MAKING SNEAK PEEK வீடியோ இதோ…