தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் ஃபேன்டஸி அட்வென்ட்சர் த்ரில்லர் படமாக வெளிவந்த மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து மாயோன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் அட்வென்ட்சர் த்ரில்லர் படமாக தயாராகி வரும் ரேஞ்சர் திரைப்படத்தில் சிபி சத்யராஜ் நடித்து வருகிறார். இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் வட்டம்.

இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வட்டம் திரைப்படத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வட்டம் திரைப்படத்திற்கு PV சங்கர் ஒளிப்பதிவில், T.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வட்டம் திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் வட்டம் திரைப்படத்திலிருந்து கண்கொத்தி பறவை எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வட்டம் படத்தின் ரொமான்டிக்கான கண்கொத்தி பறவையே பாடல் இதோ…