தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக தரமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த ஆண்டில் (2022) அசோக் செல்வனின் ஹாஸ்டல், அருண் விஜயின் யானை, அதர்வாவின் குருதி ஆட்டம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2, அருள்நிதியின் டிமான்டி காலனி 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் தெலுங்கில் நடிகர் சத்தியதேவ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் முன்னதாக ஜெயம் ரவியின் அகிலன், சிலம்பரசன்.TR - கௌதம் கார்த்திக்கின் பத்து தல, SJ.சூர்யாவின் பொம்மை என முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே தனது முதல் தெலுங்கு திரைப்படமாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் கல்யாணம் கமணீயம். இயக்குனர் அனில் குமார் ஆல்லா இயக்கத்தில் சந்தோஷ் சோபன் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள கல்யாணம் கமணீயம் திரைப்படத்தை UV கான்செப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவில், G.சத்யா படத்தொகுப்பு செய்ய, ஸ்ரவன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

வருகிற ஜனவரி 14-ஆம் தேதி சங்கராந்தி வெளியீடாக பிரியா பவானி சங்கரின் கல்யாணம் கமணீயம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கல்யாணம் கமணீயம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அசத்தலான அந்த ட்ரெய்லர் இதோ…