தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் அடுத்த அதிரடி புகைப்படம் ஆக வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது துணிவு திரைப்படம். மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து H.வினோத் - அஜித்குமார் - போகி கபூர் - நீரவ்ஷா கூட்டணியில் தயாராகியுள்ள துணிவு படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்ற, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகை மஞ்சு வாரியர் துணிவு திரைப்படம் குறித்தும் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும் போது அஜித் குமாரின் பஞ்ச் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் அதனை வாழ்க்கையில் எப்படி தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்பது பற்றி மஞ்சு வாரியர் பதிலளித்தார். அதில்,

NO GUTS NO GLORY- இது எல்லாருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான் தருணங்களில் நம்மளுடைய தைரியத்தில், நானாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும் இங்கு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அப்படி சில முடிவுகளை எடுத்திருப்போம் சில நேரங்களில் அது தோல்வியடைந்திருக்கும் சில நேரங்களில் சரியாக இருந்திருக்கும்.

வாழு வாழ விடு- இதுவும் அனைவருக்கும் சேர்ந்தது. இது அஜித் சார் எப்போதும் பேசக்கூடிய ஒரு விஷயம். நம்மால் இன்னொருத்தருக்கு கஷ்டம் வரக்கூடாது என்ற கொள்கையோடு அவர் இருக்கிறார்.

ஒருத்தர் மேல் இருக்கிற விஸ்வாசத்திற்காக இன்னொருத்தரை அசிங்கப்படுத்தாதீங்க - ஒவ்வொரு மனிதரும் அவருடைய வாழ்க்கையில் இது மாதிரியான நற்பண்புகளை கொண்டு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த உலகம் வாழ்வதற்கான இன்னும் அழகான இடமாக இருக்கும்.

என இன்னும் சில அஜித்குமாரின் பஞ்ச் வசனங்கள் குறித்து பேசியுள்ள நடிகை மஞ்சுவாரியர் துணிவு படம் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த முழு பேட்டி இதோ…