மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரித்விராஜ் தனது சிறந்த நடிப்பால் இந்திய அளவில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். முன்னதாக வெளியான பிரித்விராஜின் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என ரீமேக் ஆகிறது.

அடுத்ததாக  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ப்ரோ டாடி படத்தை இயக்கி நடிக்கிறார் பிரித்விராஜ். சமீபத்தில் வெளியான பிரித்விராஜின் கோல்டு கேஸ் மற்றும் குருதி ஆகிய த்ரில்லர் திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரித்விராஜின் அடுத்த த்ரில்லர் திரைப்படமாக வெளிவருகிறது பிரம்மம்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் மலையாள ரீமேக்காக  தயாராகும் பிரம்மம் திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.ஏபி இன்டர்நேஷனல் மற்றும் வயக்காம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மம் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

நடிகர் பிரித்திவிராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவரோடு இணைந்து  மம்தா மோகன்தாஸ், ராஷி கண்ணா, உன்னி முகுந்தன், அனன்யா நாயர் மற்றும் சங்கர் பணிக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் பிரம்மம் திரைப்படத்தின் பரபரப்பான டிரெய்லர் தற்போது வெளியானது. சுவாரஸ்யமான பிரம்மம் டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.