நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கனாதன் அடுத்ததாக நடிகராகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தனது 22 வது திரைப்படமாக தயாரிக்கும் லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா, ரவீனா, விஜய் வரதராஜ், Finally பாரத், ஆஜித் காலிக் மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய,லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். முன்னதாக லவ் டுடே திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் லவ் டுடே திரைப்படத்தின் பாடல்களை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார். இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் முதல் பாடலாக தற்போது சாச்சிட்டாளே பாடல் வெளியானது. யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ள ரொமான்டிக்கான அந்த சாச்சிட்டாளே பாடல் இதோ…