தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய் நடிப்பில் இந்த ஆண்டில் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே மற்றும் பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் மேலும் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் மற்றும் ஜீவா இணைந்து இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடித்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஜெய் நடித்துள்ள பிரேக் நியூஸ் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ஜெய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் எண்ணித்துணிக. இயக்குனர் S.K.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெயுடன் இணைந்து அதுல்யா ரவி, வித்யா பிரதீப், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் எண்ணித்துணிக திரைப்படத்திற்கு J.B.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் V.J.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். 

Rain Of Arrows தயாரிப்பில் Krikes Cine Creations வழங்கும் எண்ணித்துணிக திரைப்படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். எண்ணித்துணிக திரைப்படத்தை MSM MOVIE TRADERS வெளியீட வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் எண்ணித்துணிக திரைப்படத்திலிருந்து Sneak Peek வீடியோ வெளியானது. அந்த வீடியோ இதோ…