தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தந்தையின் டிரீட்மென்ட்டிற்காக அமெரிக்கா சென்றிருந்த சிலம்பரசன் சில வாரங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.இன்று முதல் இவர் ஷூட்டிங்கில் இணைகிறார் என்ற தகவல் கிடைத்திருந்தது.தற்போது இந்த தகவலை உறுதிசெய்யும்படி ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக சிலம்பரசன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.விரைவில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.