பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை பட பாடல்கள் இதோ!
By Anand S | Galatta | August 03, 2022 20:31 PM IST

இந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் நடன கலைஞராகவும் நடன இயக்குனராகவும் தனக்கே உரித்தான தனி ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபுதேவா பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் வெற்றிகரமான இயக்குனராகவும் நட்சத்திர நடிகராகவும் வலம் வருகிறார்.
முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் படமான பஹீரா வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மேலும் இதனையடுத்து ஃபிளாஷ்பேக், ரேக்ளா, முஸாஸிர் உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் டான்ஸ், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என பிரபுதேவா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பொய்க்கால் குதிரை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல்லு ஒளிப்பதிவில் பொய்க்கால் குதிரை படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், பொய்க்கால் குதிரை படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய Jukebox தற்போது வெளியானது. பொய்க்கால் குதிரை படத்தின் பாடல்கள் இதோ…