இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமடைந்து தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், திருட்டுப்பயலே 2, ஆடை என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அமலா பால்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை அமலா பால் அடுத்ததாக நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக மலையாளத்தில் தயாராகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

ஆடுஜீவிதம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அமலாபால் நடிப்பில் திரைப்படமாக இயக்குனர் அனூப் S பணிக்கர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் கடாவர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகவுள்ளது.

அமலா பாலுடன் இணைந்து கடாவர் திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், ரித்விகா பன்னீர்செல்வம், ரஞ்சின் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அமலாபால் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அமலாபால் தயாரிக்கும் கடாவர் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடாவர் திரைப்படத்தின் முதல் பாடலாக உன் பார்வை பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…