தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலிக்கும் அஜித் குமார் அவர்கள் இந்திய அளவில் பல கோடி ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். தனக்கே உரித்தான ஸ்டைலில் பக்கா மாஸ் திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அஜித் நடிப்பில் கடைசியாக ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்த வறுமை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் 3வது முறையாக H.வினோத்-போனிகபூர்- நீரவ்ஷாவுடன் இணைந்து அஜித்குமார் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK61 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடையே அஜித் குமார் தற்போது தனது திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தனது திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்களும் பலகோடி சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்குமாரின் AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளா இயக்குனர் விக்னேஷ் சிவன், “30YearsOfதன்னம்பிக்கை” என அஜித்குமார் குறித்து  மனதார வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பதிவு இதோ…
 

Thirty years of #ThanNambikkai

self confidence, passion , compassion,humility,humbleness, perseverance,hard work & dedication has made this Man rule the hearts of people for 30 years now!

To more years of sheer joy of jus watchin U😍 We pray & wish!

ThankU Dear #AjithSir ❤️ pic.twitter.com/mA43hi1JKL

— Vignesh Shivan (@VigneshShivN) August 3, 2022