அதர்வாவின் ட்ரிக்கர் பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
By Anand S | Galatta | August 03, 2022 19:47 PM IST

தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.
அந்தவகையில் அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, ருக்மணி வண்டி வருது ஆகிய திரைப்படங்கள் அதர்வாவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்த வரிசையில் அதர்வா நடிப்பில் மற்றொரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக விரைவில் வெளிவர தயாராகியிருக்கும் திரைப்படம் ட்ரிக்கர்.
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் தயாராகியுள்ள ட்ரிக்கர் படத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ட்ரிக்கர் திரைப்படத்தை SP சினிமாஸ் வெளியிடுகிறது.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள ட்ரிக்கர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ட்ரிக்கர் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரிக்கர் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Trigger - @Atharvaamurali and @ANTONfilmmaker are back with an exciting action thriller!
— Udhay (@Udhaystalin) August 3, 2022
Tamil Nadu release by #RomeoPictures in September 2022! @mynameisraahul @pramodfilmsnew @miraclemoviesin @DesiboboPrateek @ShrutiNallappa @GhibranOfficial pic.twitter.com/myRxkVmnJQ