தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் முன்னதாக இந்த ஆண்டு இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 மற்றும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என நான்கு படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து தனது 33-வது திரைப்படத்தில் மீண்டும் டெடி பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுடன் இணைந்துள்ளார் ஆர்யா. #Arya33 படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, நடிகை சிம்ரன், காவியா ஷெட்டி மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ,இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் #Arya33 திரைப்படத்திற்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து ஆர்யாவின் #Arya33 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு கேப்டன் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 18) கேப்டன் எனும் டைட்டிலை அறிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் வெளியானது. கேப்டன் பட டைட்டில் போஸ்டர் இதோ...