ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், டாப் 20 யில் இந்திய பவுலர்கள் யாருமே இடம் பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 20 ஓவர் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் ஆசம் நம்பர் 1 இடத்தை பிடித்து உள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் உயர்ந்து 5 வது இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இந்தியா வீரர்களான லோகேஷ் ராகுல் 5 வது இடத்தில் இருந்து 6 வது இடத்துக்கு சறுக்கி உள்ளார்.

அதே போல், மற்ற இந்திய வீரர்களான விராட் கோலி 8 வது இடத்திலும், ரோகித் சர்மா 16 வது இடத்திலும் இடம் பிடித்து உள்ளனர்.

குறிப்பாக, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், 8 இடங்கள் சரிந்து 33 வது இடத்தையும், ஆட்ட நாயகனாக தேர்வான மிட்செல் மார்ஷ் 6 இடங்கள் முன்னேறி 13 வது இடத்தையும் பெற்று இருக்கிறார்கள்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 இடங்கள் அதிகரித்து 32 வது இடத்தில் உள்ளார்.

அதே போல், பந்து வீச்சாளர்களின் தர வரிசையில் இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா முதலிடம் பிடித்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, தென் ஆப்பிரிக்கா வீரர் தப்ரைஸ் ஷம்சி 2 வது இடம் பிடித்திருக்கிறார். 

உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 5 வது இடத்திலிருந்து 3 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 

மிக முக்கியமாக, டாப் 10 இடங்களில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது, இந்திய கிரிக்கெட் ரசிர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

மேலும், இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின், நல்ல முறையில் பந்து வீசி வருவதால் தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவர் டாப் 10 இடத்துக்கு வரக்கூடிய தகுதி உடைய பவுலராக வலம் வரக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, டி20 அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணியே அசைக்க முடியாதா டாப் ஒன் அணியாக இருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக, இந்தியா 2 வது இடத்திலும், பாகிஸ்தான் 3 வது இடத்திலும் உள்ளது. 

நியூசிலாந்து அணி 4 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 5 வது இடத்திலும் இருக்கும் நிலையில், தற்போதைய உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 6 வது இடத்தில் உள்ளது. 

முக்கியமாக, பவுலிங்கில் 4 ஆம் இடத்தில் ஆதில் ரஷீத், 5 ஆம் இடத்தில் ரஷீத்கான், 6 வது இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட், 7 வது இடத்தில் முஜீப் உர் ரஹ்மான், 8 வது இடத்தில் ஆன்ரிச் நார்ட்யே டிம் சவுதீ, ஜோர்டான் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இதனிடையே, ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய பவுலர்கள் யாரும் டாப் 20 ல் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

இந்திய பவுலரான புவனேஷ்வர் குமார் 25 வது இடத்திலும், இதனையடுத்து தீபக் சாகர் 59 வது இடத்திலும், 86 ம் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும் உள்ளார்.

அதே போல், மொத்தம் டாப் 100 ல் டி 20 கிரிக்கெட்டில், இந்த 3 பேர் மட்டுமே இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.