விஜய் டிவியின் பெரிய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சாதாரண மனிதர்களின் பாடும் திறமையை கண்டுபிடித்து அவர்களை பிரபலங்களாக மாற்றும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பல சீசன்களை கடந்து இப்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலரும் திரைப்படங்களில் பாடகர்களாக மாறி அசத்தியுள்ளனர்.சூப்பர் சிங்கரின் நான்காவது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் சில சூப்பர்ஹிட் படங்களில் பாடி அசத்தியிருந்தார்.

நோட்டா,விஸ்வரூபம் 2,தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.இவருக்கும்  ஷர்மதா என்பவருக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

தற்போது அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷர்மதா இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.