விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.

இந்த தொடர் ஏற்கனவே தெலுங்கு உள்ளிட்ட சில சில மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது இதனை தொடர்ந்து இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் கிடைத்தது எப்போதும் ஹிந்தியில் இருந்து தான் சீரியல்கள் விஜய் டிவியில் ரீமேக் ஆகும் ஆனால் விஜய் டிவியில் தமிழில் இருந்து ஹிந்திக்கு டப் ஆகும் முதல் சீரியல் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றுள்ளது

தற்போது இந்த தொடரின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.தமிழில் அண்ணனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தம்பிகள் வளர்ந்த பின் கதையை தொடங்கினர்,ஆனால் ஹிந்தியில் அண்ணனுக்கு திருமணமானது முதல் தம்பிகள் குழந்தைகளாக இருப்பது முதலே கதை தொடங்குவது ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.