ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர் நடிகர் அஸீம். சன் டிவியில் பிரியமானவள் விஜய் டிவியில் பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, கடைக்குட்டி சிங்கம் எனப் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு ஜோடியாக நடித்தார். ஷிவானியுடன் ஜோடி நிகழ்ச்சியிலும் அஸீம் கலந்து கொண்டார்.

அஸீமுக்கு சில ஆண்டுகளுக்கு முன் சல்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்தச் சூழலில் அஸீம்-சல்மா இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டானதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருமணம், பிரிவு குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்த அஸீம் தற்போது முதன் முறையாக தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஆமாம்... நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளார் அஸீம்.

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அஸீமும் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைய இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது அம்மா விபத்தில் சிக்கிய காரணத்தினால் அஸீம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை. அதனால் எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றத்தை தான் அளித்தது.

இச்செய்தி அறிந்த ரசிகர்கள், அஸீமுக்கு ஆறுதல் கூறி பதிவு செய்து வருகின்றனர். நடிகர் அஸீம் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்கிறார், யாருடன் சேர்ந்து நடிக்கிறார் போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

pagal nilavu fame serial actor azeem gets mutually divorced from his wife