தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் பிரம்மாண்டமாக பீரியட் தயாராகவுள்ளது.

தொடர்ந்து பாலிவுட்டிலும் இயக்குனராக களமிறங்கும் பா.ரஞ்சித், ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களின் தலைவராகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த பிர்ஸா முண்டாவின் பயோபிக் படத்தை இயக்கவுள்ளார். மேலும் பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அழகிய காதல் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார்.

வழக்கமாக இயக்குனர் பா.ரஞ்சித் உடன் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் அல்லாமல் முழுக்க முழுக்க புது அணியின் உழைப்பில் உருவாக்கியிருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

"Love is Political". First look of my next from 06.07.22. @YaazhiFilms_@officialneelam Art by ⁦@kabilanchelliahpic.twitter.com/7jZy7A90dn

— pa.ranjith (@beemji) July 4, 2022