தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் வரிசையாக அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. முன்னதாக சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதனையடுத்து தமிழில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர்கள் பாபி மற்றும் வெங்கி குடுமலா இயக்கத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்

தொடர்ந்து புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் சிரஞ்சீவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது.  இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் திரைப்படம் காட்ஃபாதர்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் காட்ஃபாதர் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காட்ஃபாதர் படத்தில் நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் காட்ஃபாதர் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவில் S.தமன் இசையமைக்கிறார்.  இந்நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவும் வெளியானது. காட்ஃபாதர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ இதோ…
 

#GodFather 🔥🔥

- https://t.co/6fsSJK3kGL pic.twitter.com/F5fEGkt4jm

— Super Good Films (@SuperGoodFilms_) July 4, 2022