“உதய்பூரில் டெய்லரை கொலை செய்தவர்களில் ஒருவர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் காஷ்மீரில் கைதான பயங்கரவாதி பாஜகவில் பொறுப்பில் இருந்தது தெரியவந்து” கடும் அதிர்ச்சியையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, இந்தியாவில் சில தருணங்களில் அரங்கேறும் சர்ச்சைகளும், அதன் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறைகளும், கொலைகளும் இந்தியாவையும் தாண்டி, சர்வதேச அளவில் கவனம் பெறுவதுண்டு.

அப்படியாக, சர்வதேச அளவில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்த பிரச்சனைதான் உதய்பூர் கொலை சம்வம்.

அதாவது, முகமது நபி குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளால், இந்தியா சர்வதேச நாடுகளிடமிருந்து மிகப் பெயரி எதிர்ப்பை எதிர்கொண்டது.

இது குறித்து, பல இஸ்லாமிய நாடுகளும் அறிக்கைகளை வெளியிட்டு இந்திய அரனை மிக கடுமையாக சாடியது. இதனால், “இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், கத்தார் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளும் போர் கொடி தூக்கின. 

இதன் காரணமாகவே, நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை மேற்கொண்டது.

பின்னர், இந்த சம்பவம் குறித்து இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த 48 வயதான கன்ஹையா லால் என்பவர், கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர் உதய்பூர் கொலை வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்ஸியிடம்மத்திய அரசை ஒப்படைத்தது குறித்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அதன்படி, “நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த கன்ஹையா லால், கடைக்கு வந்த இருவரால் கொலை செய்யப்பட்டார் என்றும், அந்தக் கொலைக்கு ரியாஸ் அட்டாரி, கௌஸ் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர் என்றும், ஆனால் இவர்கள் இருவரும் இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காகப் பழிவாங்கினோம், என்று கூறியதாகவும் கூறப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரிக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பது, தற்போது உறுதியாகி உள்ளதாக” அம்மாநில காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பாஜக தலைவர்களின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளைக் கண்டறிந்த போது, “பாஜக தலைவர்களின் நிகழ்வுகளில் ரியாஸ் அட்டாரி தொடர்ச்சியாக கலந்துகொண்டிருக்கிறார் என்றும், பாஜக தலைவர்கள் அவரை பாய் என்று குறிப்பிட்டுப் பதிவிட்டு உள்ளனர் என்றும், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?” என்றும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பூதகாரமாக வெடித்து கிளம்பியது.

அதே போல், ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து, அம்மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட மிக பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் தான், “கைது செய்யப்பட்ட பைசல் அஹமது, தலிப் ஹுசைன் ஆகிய 2 பேரில் தலிப் ஹுசைன் பாஜக கட்சியின் நிர்வாகி என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. 

அங்குள்ள ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜக வில் இணைந்து, மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் என்றும், இவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்து உள்ளார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

தீவிரவாதி ஒருவர், பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டே தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த செய்தி வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், பலரும் பாஜகவிற்கு எதிராக, எதிர்மறையான கருத்துக்களை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால், பாஜகவிற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.