ஆகச் சிறந்த நடிகராக புது புது கதாபாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சீயான் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள கோப்ரா படத்தில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கோப்ரா படத்தின் 3-வது பாடலாக உயிர் உருகுதே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மனதை மயக்கும் உயிர் உருகுதே பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். கோப்ரா படத்தின் உயிர் உருகுதே பாடல் இதோ…