“இது ப்யூட்டி இல்லங்க.. பாட்டி..” இளம் பெண்ணாக மேக்கப் போட் பாட்டி.. 3 ஆண்களை திருமணம் செய்து மோசடி!

“இது ப்யூட்டி இல்லங்க.. பாட்டி..” இளம் பெண்ணாக மேக்கப் போட் பாட்டி.. 3 ஆண்களை திருமணம் செய்து மோசடி! - Daily news

பேரன் - பேத்தி எடுத்த பெண் ஒருவர், இளம் பெண் போல் மேக்கப் போட்டு, கிட்டதட்ட 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை ஆவடி முத்தாப்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 47 வயதான கோவர்தனன் என்பவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். 

இந்த சூழலில் தான், கோவர்தன், அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவியை விவாகரத்து செய்து, அவரை விட்டு தனியாக பிரிந்திருக்கிறார்.

சில நாட்கள் அவர் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், “கோவர்தனனின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது” என்று, அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது தாயார் இந்திராணி முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, அங்குள்ள ஒரு திருமணத் தகவல் மையத்தின் மூலமாக ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை அவர்கள் பார்த்து உள்ளனர்.

அப்போது, சந்தியாவை, கோவர்த்தனனுக்குப் பிடித்து போகவே, அந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை திருநின்றவூரில் ஒரு திருமண மண்டபம் இவர்களுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

இந்த திருமணத்தைப் பதிவு செய்வதற்காக ஆதார் கார்டு, கல்வி சான்று உள்ளிட்டவற்றைக் கோவர்த்தனன், தனது 2 வது மனைவியிடம் கேட்டு உள்ளார். 

இப்போது, “நமக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் அதன்பிறகு நமது திருமணத்தைப் பதிவு செய்யலாம்” என்று, நாட்களை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து உள்ளார் அந்த பெண் சந்தியா.

அதன் தொடர்ச்சியாக, திருமணத்திற்குப் பிறகு “இனி உங்களது சம்பளத்தை நீங்கள் என்னிடம் தான் கொடுக்க வேண்டும்” என்று, புது மனைவி சந்தியா, கோவர்த்தனனிடம் வற்புறுத்தி இருக்கிறார்.

இதனையடுத்து, அந்த கணவன் தனது முழு சம்பளத்தையும், சந்தியாவிடமே கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, “கணவனின் சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தர வேண்டும்” என்று, சந்தியா அடம் பிடித்து உள்ளார்.

இதனால், 2 வது மனைவி சந்தியா மீது சந்தேகம் அவருக்கு ஏற்பட்ட நிலையில், அந்த சந்துகத்தை தீர்க்க அவர் கொடுத்திருந்த முகவரிக்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டிலிருந்த ரவி என்பவரிடம் சந்தியா குறித்து விசாரித்து இருக்கிறார் கணவன் கோவர்தனன். 

அப்போது தான், அந்த வீட்டில் இருந்த ரவி, சந்தியாவின் முதல் கணவர்தான் என்பது தெரிய வந்தது.

அத்துடன், ரவி - சந்தியா தம்பதிக்கு ஏற்கனவே 2 மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது. 

குறிப்பாக, அந்த வீட்டிலிருந்த சந்தியாவின் போட்டோவில், அவரது தலை நரைத்து இருந்ததைக் கண்டு கோவர்தனன் இன்னும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

முக்கியமாக, சந்தியாவிற்கு 50 வயது நடப்பதாக, அவரது முதல் கணவன் ரவி கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அவருக்குத் தலை சுற்றி உள்ளது.

அப்போது தான், அந்த பெண் சந்தியா தலைக்கு டை அடித்து, பியூட்டி பார்லரில் மெருகேற்றி தன்னை அந்த பெண் ஏமாற்றி வந்ததை கண்டு, அவர் தனது அம்மாவிடம் வந்து புலம்பி தவித்து இருக்கிறார்.

இதனையடுத்து, சந்தியா தங்களை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக, பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி கணவன், அங்குள்ள ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதையடுத்து, சந்தியா கடந்த ஜூன் 28 ஆம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், “கடந்த 2010 ஆம் ஆண்டு கணவர் ரவியுடன் சண்டை போட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா, அதன் பிறகு சித்தூரில் உள்ள அவரது அம்மா வீட்டில் தங்கி இருந்து உள்ளார்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரை அவர் 2 வது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்தும் வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு தரகர் மூலமாக பார்லர் சென்று பாட்டியான தனது தோற்றத்தை ப்யூட்டியாக மாற்றி,  3 வதாக கோவர்தனனை திருமணம் செய்துக்கொண்டதும் தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், ஒவ்வொரு கணவனையும் இவர் திருமணம் செய்துகொண்ட போது, தனது பெயரை சுகுணா, சந்தியா, சுகன்யா என்று, 3 கணவருக்கும் 3 பெயர்களை கூறிக்கொண்டதும் தெரிய வந்தது.

மிக முக்கியமாக, சந்தியாவின் 2 மகள்களுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் இதனால் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த சந்தியா, ப்யூட்டி இல்லை, பாட்டி என்பதும் போலீசாரின் விசாரணையில் உறுதி” செய்யப்பட்டது.

இப்படியாக, பேரன், பேத்திகள் இருக்கும் வயதில் 3 ஆண்களை மோசடியாக திருமணம் செய்து ஏமாற்றி, 4 வது திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த சந்தியாவை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Comment