தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகியாகத் திகழும் நடிகை நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் படத்தில் தற்போது நடித்து வரும் நயன்தாரா தொடர்ந்து தெலுங்கில் லூசிஃபர் படத்தின் ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் இன்று ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், அனிருத் உட்பட முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொண்ட நயன்தாராவின் திருமணத்திற்கு அட்டகாசமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருந்தில் பலாப்பழ பிரியாணி உட்பட முழுக்க முழுக்க சைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை அழகிய தொகுப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படபாக்கப்பட்டு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆதரவற்றோர் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திருவண்ணாமலை உட்பட முக்கிய கோவில்களில் இவர்களின் கல்யாண விருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.