தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் முனீஸ்காந்த் ஆரம்பக்கட்டத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

தொடர்ந்து குணச்சித்திர நடிகராகவும் பல விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் முனீஸ்காந்த், குறிப்பாக லோகேஷ் கனகராஜின் மாநகரம், மரகத நாணயம், ராட்சசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, சிலம்பரசன்TR-ன் ஈஸ்வரன், GV பிரகாஷின் பேச்சுலர், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் தற்போது மரகதநாணயம், ராட்சசன், பேச்சுலர் ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான AXESS FILM FACTORY நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் மிடில்கிளாஸ் திரைப்படத்தில் நடிகர் முனீஸ்காந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முனீஸ்காந்த் உடன் இணைந்து நடிகை விஜயலக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மிடில் கிளாஸ் படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்குகிறார்.

சுதர்சன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்யும் மிடில் கிளாஸ் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்நிலையில் மிடில்கிளாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜூன் 24-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

We are elated to announce that our #ProductionNo14 #MiddleClass fun filled family drama of the middle class lifestyle,started today with Pooja.@Dili_AFF #munishkanth @vgyalakshmi @Kishoremuthura1 @DhayaSandy @dop_sudarshan @Sanlokesh @itspooranesh @kvdurai @DoneChannel1 @decoffl pic.twitter.com/jhEiy0b1DK

— Axess film factory (@AxessFilm) June 23, 2022