தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலிக்கும் தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாரிசு.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முதல் முறையாக விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக வாரிசு படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் மெகா மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து இயக்குனர் பாபி இயக்கத்தில் நடித்து வரும் #MEGA154 திரைப்படமும் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அடுத்த ஆண்டு (2023) பொங்கல் ரேஸில் வாரிசு மற்றும் MEGA154  திரைப்படங்கள் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. 
 

Box office veta ku Langaru tayaaru ⚓🔥#Mega154 Grand Worldwide Release in Cinemas this Sankranthi 2023 💥💥#Mega154ForSankranthi 💥

Megastar @KChiruTweets @shrutihaasan @dirbobby @ThisIsDSP pic.twitter.com/FAbukAEjF8

— Mythri Movie Makers (@MythriOfficial) June 24, 2022