இந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு திரைப்படத்தை மாதவன் தயாரித்து இயக்கி நடிக்கிறார்.

ராக்கெட்ரி-நம்பி விளைவு திரைப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள, ராக்கெட்ரி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று படக்குழுவினரை கௌரவித்தனர். இந்நிலையில் ராக்கெட்ரி திரைப்படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியானது. ராக்கெட்ரி படத்தின் விறுவிறுப்பான புதிய ட்ரைலர் இதோ…