ஆகச் சிறந்த நடிகராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும் சந்தனம் எனும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தியில் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள நிலையில், தொடர்ந்து பாலிவுட்டில் கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் மற்றும் அதித்தி ராவ் ஹைதரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த மாமனிதன் திரைப்படம் இன்று (ஜூன் 24) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் மாமனிதன் திரைப்படத்தை YSR புரொடக்ஷன்ஸ் சார்பில் யுவன்சங்கர் ராஜா தயாரிக்க, ஸ்டூடியோ 9 சார்பில் RK.சுரேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார். தற்போது ரிலீசாகியுள்ள மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மாமனிதன் திரைப்படத்தை பார்த்து ரசித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமனிதன் திரைப்படம் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த மனநிறைவை கொடுத்துள்ளது… இயக்குனர் சீனு ராமசாமி தன்னை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்து சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்… விஜய் சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்! தேசிய விருது கட்டாயம் கிடைக்கும்… இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும்  ஆத்மார்த்தமாக இருந்தது…” என தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் அந்த பதிவு இதோ…
 

#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl ‘s brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.

— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022