தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மித்ரன் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்த மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

அடுத்ததாக இயக்குனர் P.S.மிதர்ன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகியுள்ள சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக வருகிற அக்டோபர் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இதனிடையே தற்போது இயக்குனர் P.S.மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆஷா மீரா ஐயப்பன் எனும் பிரபல சினிமா செய்தியாளரை இயக்குனர் P.S.மித்ரன் கரம்பிடிக்கிறார். இயக்குனர் P.S.மித்ரன்-ஆஷா மீரா ஐயப்பன் இருவருக்கும் கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் P.S.மித்ரன் மற்றும் ஆஷா மீரா ஐயப்பன் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார், இயக்குனர் மித்ரன் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் இதோ…
 

Happy Engagement! Congrats ⁦⁦@Psmithran⁩ ⁦@aashameera⁩ 💐💐 pic.twitter.com/8ZlasqXlc9

— Ravikumar R (@Ravikumar_Dir) June 23, 2022