நர்சுகளுடன் நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக உல்லாச குளியல் போட்ட அரசு மருத்துவர்!

நர்சுகளுடன் நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக உல்லாச குளியல் போட்ட அரசு மருத்துவர்! - Daily news

சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை தவிக்க விட்டுவிட்டு, தன்னுடன் பணிபுரியு்ம நர்சுகளுடன் அரசு மருத்துவர் ஒருவர், நீச்சல்குளத்தில் உல்லாச குளியல் போட்ட சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக தினகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். 

இவர், அந்த அரசு மருத்துவமனையில் தான் ஒரு தலைமை மருத்துவர் என்கிற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய வயதுக்கு மீறிய சில சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு தற்போது மாட்டிக்கொண்டு உள்ளார்.

அதாவது, கடந்த 19 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, தனக்கு அரசு மருத்துவமனையில் பணி இருந்தும், இவர் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வரவில்லை. 

ஆனால், தனக்கு பதிலாக தற்போது மருத்துவம் படித்து முடித்த தனது மகனை அழைத்து வந்து “இன்றைய தினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனித்து கொள்ளும் படி” தனது மகனிடம் கூறியிருக்கிறார்.

அத்துடன், அந்த அரசு மருத்துவமனையில் இருந்த சக செவிலியர்களையும், ஒரு குழுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு. ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறார் அந்த டாக்டர்.

இதனையடுத்து, தனது மருத்துவமனை நர்ஸ்களுடன் ஒரு குழுவாக புறப்பட்ட அந்த டாக்டர், அங்குள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்துக்கு அந்த நர்ஸ்கள் அனைவரையும் அழைத்துச் சென்று உள்ளார். 

நீச்சல் குளத்திற்கு சென்றதும், தன்னுடன் வந்த சக செவிலியர்கள் மத்தியில், அறை நிர்வாணத்துடன் அந்த நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போட்டு உள்ளார். 

அத்துடன், அந்த டாக்டருடன் சென்ற பல நர்ஸ்களும் அந்த டாக்டருன் சேர்ந்து அந்த நீச்சல் குளத்தில் இறங்கி குதூகலம் போட்டு உள்ளனர்.

இதனையடுத்து, “அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்காமல், தலைமை மருத்துவர் ஒருவர், அதே மருத்துவமனை நர்ஸ்களுடன் ஊர் சுற்றியதற்கான புகைப்படங்கள், தற்போது வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், “ஒரு தலைமை மருத்துவர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளலாமா? என்றும், இவரே இப்படி நடந்து கொண்டால் இவருக்கு கீழ் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்” என்றும், பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதனையடுத்து, இந்த போட்டோக்கள் யாவும் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்று உள்ளது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட டாக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி, அந்த டாக்டர் மீது தற்போது நடவடிக்கை பாய்ந்து உள்ளது. 

இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததில், “ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுமுறை என்பவதால், என்னுடன் பணி புரியும் செவிலியர்களுடன் சுற்றுலா சென்றேன்” என்று, ஆணவமாக பதில் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், “விடுப்பில் சென்ற நீங்கள் ஏன் உங்கள் மகனை சிகிச்சை அளிக்க வைத்தீர்கள்?” என்று, உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் சொல்ல முடியாமல் டாக்டர் தினகரன் அப்படியே நின்று உள்ளார். 

இதனால், டாக்டர் தினகரனின் பதில்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால், விரிவான அறிக்கை தயார் செய்து அதை மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை இயக்குனர் கோமதி ஈடுபட்டு உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, “அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியில் இருந்த சக செவிலியர்களை தன்னுடன் அழைத்துச் சென்று, அவர்களுடன் நீச்சல் குளத்தில் அறை நிர்வாணத்துடன் உல்லாசம் குளியல் போட்ட சம்பவம்” தற்போது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment