மிர்ச்சி சிவாவின் பக்கா என்டர்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்… அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

மிர்ச்சி சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் பட ட்ரெய்லர்,Mirchi shiva in single shankarum smartphone simranum movie trailer | Galatta

தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து பல வித்தியாசமான நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் மிர்ச்சி சிவா. முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் மிர்ச்சி சிவா தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சரோஜா திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழ் சினிமாவின் சிறந்த பூப்ஸ் திரைப்படமாக கொண்டாடப்படும் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த மிர்ச்சி சிவா, அந்த திரைப்படத்திற்கு அவரை விட சிறந்த தேர்வாக யாரும் இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு கனகச்சிதமாக நடித்ததோடு அத்திரைப்படம் முதல் அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார்.

அடுத்தடுத்து இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் விமலுடன் இணைந்து கலகலப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தில்லு முல்லு படத்தின் ரீமேக், இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் முதல் படமான வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்த சிவா சென்னை 600028 2, கலகலப்பு 2, தமிழ் படம் 2 என தனது திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களிலும் நடித்து கலக்கினார். கடைசியாக சிவா நடிப்பில் வெளிவந்த இடியட் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. முன்னதாக சிவா நடித்துள்ள சுமோ திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. அதேபோல் 1970களில் வெளிவந்து மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள காசேதான் கடவுளடா, யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்துள்ள சலூன், ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படம். இயக்குனர் விக்னேஷ் ஷா.PN இயக்கத்தில் மிர்சி சிவா உடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அஞ்சுக்குரியன் மற்றும் மா கா பா ஆனந்த், பாடகர் மனோ, பக்ஸ், ஷாரா, KPY பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். LARK ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்திற்கு ஆர்தர் A வில்சன் ஒளிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். 

11:11 ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் Dr.பிரபு திலக் வெளியிடும்  சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ம் தேதி உலகெங்கும் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் இதோ…
 

மிர்ச்சி சிவாவின் காமெடி சரவெடியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான புது GLIMPSE இதோ!
சினிமா

மிர்ச்சி சிவாவின் காமெடி சரவெடியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான புது GLIMPSE இதோ!

சினிமா

"தளபதி விஜயின் லியோ LCUல் உள்ளதை பிரபல இயக்குனர் உறுதி செய்கிறாரா?"- ட்ரண்டாகும் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!