தனுஷின் புதிய வீட்டில் கோலாகலம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தனுஷின் புதிய வீட்டில் சிவராத்திரி கொண்டாட்டம்,dhanush celebrated maha shivarathri at his new home | Galatta

ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி வரும் நடிகர் தனுஷ் கடந்த 2022ம் ஆண்டில் ரசிகர்களுக்கு வரிசையாக அசத்தலான திரைப்படங்களில் ட்ரீட் கொடுத்தார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக, அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த தி கிரே மேன் எனும் ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின்னர் தனுஷின் ஃபேவரட் கதாபாத்திரங்களாக ரசிகர்கள் என்றும் விரும்பும் யாரடி நீ மோகினி மற்றும் வேலையில்லா பட்டதாரி படங்களின் பாணியில் இயக்குனர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

முன்னதாக தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாகியுள்ள வாத்தி (SIR) திரைப்படம், தற்போது ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாக்கு திரைப்படம் தனுஷின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்ததாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமான அதிரடி பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இது போக இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை 2, இயக்குனர் செல்வராகவனின் புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்களும் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே தனது கனவு இல்லத்தை நடிகர் தனுஷ் சமீபத்தில் கட்டி முடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் உள்ள சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் கனவு இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது புதிய வீட்டில் மகாசிவராத்திரியை கொண்டாடி இருக்கிறார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Shivaratri celebrations in Dhanush's home!🎉@dhanushkraja #Dhanush #Vaathi #CaptainMiller #Galatta pic.twitter.com/vhKC8pnCL5

— Galatta Media (@galattadotcom) February 20, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!
சினிமா

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!