மிர்ச்சி சிவாவின் காமெடி சரவெடியான சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான புது GLIMPSE இதோ!

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் பட Sneak Peek,single shankarum smartphone simranum movie sneak peek video | Galatta

பிரபலமான ரேடியோ ஜாக்கியாக தமிழ் மக்களிடையே தனக்கென தனி இடம் பிடித்து பின்னர், தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய மிர்ச்சி சிவா, இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பிரபலம் அடைந்தார். அதனையடுத்து இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அட்டகாசமான ஸ்பூஃப் படமாக வந்த தமிழ் படம் திரைப்படத்தில் கதாநாயகனாக கணக்கச்சிதமாக நடித்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த சிவா அதன் பின் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா என அன்போடு அழைக்கப்படுகிறார். 

தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து கலகலப்பான என்டர்டெய்னிங் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் சிவா பின்னர் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் நடிகர் விமலுடன் இணைந்து கலகலப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான தில்லு முல்லு படத்தின் ரீமேக், இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் முதல் படமான வணக்கம் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில், சிவா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் சென்னை 600028 2, கலகலப்பு 2, தமிழ் படம் 2 என தனது திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களிலும் நடித்து கலக்கிய நடிகர் சிவா நடிப்பில் கடைசியாக இடியட் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் வெளியே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

முன்னதாக சிவா நடித்துள்ள  சுமோ திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. அதேபோல் 1970களில் வெளிவந்து மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள காசேதான் கடவுளடா, யோகி பாபு மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்துள்ள சலூன், ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்த கலக்கல் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படம். இயக்குனர் விக்னேஷ் ஷா.PN இயக்கத்தில் மிர்சி சிவா உடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அஞ்சுக்குரியன் மற்றும் மா கா பா ஆனந்த், பாடகர் மனோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

LARK ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்திற்கு ஆர்தர் A வில்சன் ஒளிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். முன்னதாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் திரைப்படத்தின் கலகலப்பான SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்த SNEAK PEEK வீடியோ இதோ…
 

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!
சினிமா

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா திடீரென காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா திடீரென காலமானார்! சோகத்தில் திரையுலகம்