சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தனது அண்ணனின் 80வது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,super star rajinikanth brother sathyanarayana rao 80th birthday function | Galatta

ஸ்டைல் என்று சொன்னாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஏதோ சில ஆண்டுகள் ஒரு ட்ரெண்ட்டை செய்து வந்தாலே மிகப்பெரிய விஷயமாக கருதும் இந்திய திரை உலகில் கிட்டத்தட்ட தனது துறை பயணத்தின் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அட்டகாசமான ஸ்டைல் ஆல் ரசிகர்களை கட்டி போட்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் போது திரையரங்குகள் திருவிழா காணும் அந்த வகையில் கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் திருவிழா தினமான தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆனது. இருப்பினும் எதிர்பார்த்த மிகப்பெரிய வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற தவறியது.

இதனை அடுத்து கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்  தமன்னா ஆகியோருடன் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் மிக முக்கியமான கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருகின்றன. டான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன. இதுபோக இன்னும் சில இயக்குனர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடன்பிறந்த சகோதரரான சத்திய நாராயண ராவ் கேக்வாட் அவர்களின் 80வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அண்ணன் சத்திய நாராயணராவ் கேக்வாட் அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவிலும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60-வது பிறந்த விழாவிலும் ஒரே நாளில் எனது குடும்பத்தோடு கலந்து கொண்டு கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பொன்னான இதயம் கொண்டவரை தங்கத்தால் குளிப்பாட்டியதை பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டு விழாவின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Had the happiness of celebrating the 80th birthday of my brother Sathyanarayana Rao Gaikwad and the 60th birthday of his son Ramakrishna on the same day with my family … felt blessed to shower gold on this golden heart which made me who I am today 🙏🏻 thankful to god. pic.twitter.com/s8npLIzjHG

— Rajinikanth (@rajinikanth) February 19, 2023

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி! வீடியோ இதோ
சினிமா

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி! வீடியோ இதோ

நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்! கண்ணீரில் ரசிகர்கள்
சினிமா

நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்! கண்ணீரில் ரசிகர்கள்

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே
சினிமா

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே