பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே பட பிளாக்பஸ்டர் வெற்றியின் எதிரொலி... ரசிகர்களை உற்சாகப்படுத்திய செம்ம அறிவிப்பு இதோ!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே,pradeep ranganathan love today movie hindi remake announcement | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தற்போது உயர்ந்திருப்பவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். முன்னதாக தனது WhatsApp காதல், காலேஜ் டைரிஸ், ஹைவே காதலி ஆகிய குறும்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த App(a) Lock எனும் குறும்படம் ரசிகர்களிடையே மிகப் பிரபலம் அடைந்தது. குறும்படங்களில் மக்களை கவர்ந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 90'ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த அட்டகாசமான திரைப்படமாக உருவான கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தனது முந்தைய குறும்படமான App(a) Lock குறும்படத்தின் விரிவுபடுத்தப்பட்ட படைப்பாக லவ் டுடே கதையை கையில் எடுத்தார். இந்த முறை இயக்குனராக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் புதிய அவதாரம் எடுத்த இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கால்பாத்தி அவர்கள் தயாரித்தார். உத்தமன் பிரதீப் எனும் கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க, நிகிதா எனும் கதாபாத்திரத்தில் இவானா கதாநாயகியாக நடித்தார். மேலும் யோகி பாபு, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

இந்த தலைமுறை ரசிகர்களின் அத்தியாவசிய பொருளாக திகழும் ஸ்மார்ட் ஃபோனை கதையின் முக்கிய அங்கமாக வைத்து இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திய திரைக்கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி வெளிவந்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 100வது நாள் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. எனவே லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அட்டகாசமான புதிய செய்தி வெளியானது. முன்னதாக தமிழில் ஹிட்டடித்த லவ் டுடே திரைப்படம் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் வெளியிட தெலுங்கில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளிவந்து தெலுங்கு மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது லவ் டுடே திரைப்படம் ஹிந்திக்கும் சென்றுள்ளது. பாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபேன்தம் ஸ்டுடியோஸ் நிறுவனம் லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அந்த அறிவிப்பு இதோ…
 

#LoveToday is coming for Hindi audience .
Best wishes @FuhSePhantom @Ags_production https://t.co/v5ljz2Ca4O

— Pradeep Ranganathan (@pradeeponelife) February 20, 2023

சினிமா

"தளபதி விஜயின் லியோ LCUல் உள்ளதை பிரபல இயக்குனர் உறுதி செய்கிறாரா?"- ட்ரண்டாகும் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

ARமுருகதாஸ் - கௌதம் கார்த்திக்கின் அசத்தலான அடுத்த படம்... கவனத்தை ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ!