பிக்பாஸ், குக் வித் கோமாளி தொடர்ந்து பாபா பாஸ்கர் மாஸ்டரின் புது அவதாரம்.. - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ இதோ..

பிரபல தொலைக்காட்சி தொடரில் பாபா பாஸ்கர் மாஸ்டர் - Baba Bhaskar special appearance in zee television serial | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர் பாபா பாஸ்கர். பிரபல நடன இயக்குனரான இவர் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர். தமிழில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தன் திரைபயணத்தை  தொடங்கியவர். பின் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாகியுள்ளார். குறிப்பாக தனுஷ் பாபா பாஸ்கர் கூட்டணி ரசிகர்களுக்கு நெருக்கமான கூட்டணி என்பது குறிப்பிடதக்கது. தனித்துவமான நடன வடிவமைப்பு அதிகம் திரைத்துறையில் பேசப்படும். மேலும் சில பாடல்களுக்கு சிறப்பு வருகை தந்தும், சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் பாபா பாஸ்கர். மேலும் கடந்த 2019 ல் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தை இயக்கிவுள்ளார் பாபா பாஸ்கர் என்பது குரிப்பிடதக்கது. அதே ஆண்டில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது இடம் பிடித்து தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

அதன் பின் 2020 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் இவர் நான்காவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரவலாக பிடித்த பிரபலமானார். மேலும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, ‘சூப்பர் ஜோடி’ போன்ற நிகழ்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.  இப்படி ஒரே நேரத்தில் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் நடன வடிவைப்பளாராக பணியாற்றி வரும் பாபா பாஸ்கர் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்.   

இந்நிலையில் மாஸ்டர் பாபா பாஸ்கர் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நெடுந்தொடரில் மாரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by zeetamil (@zeetamizh)

நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடக்கவிருக்கும் திருமண நிகழ்வை பல தடைகளை எதிர்கொண்டு நடத்தி கொடுப்பாரா பாபா பாஸ்கர் என்று இவருகேன்ற தனி சிறப்பு புரோமோவை வெளியிட்டுள்ளது சீரியல் குழு. நினைத்தாலே இனிக்கும் தொடர் பெங்காலி மொழியில் பிரபலமான ‘மிதாய்’ தொடரின் தமிழ் ரீமேக்காகும் என்பது கூடுதல் தகவல்.

இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் 'Project K' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் 'Project K' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு - வைரலாகும் அப்டேட் இதோ..

2023 Summer Releases  - ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

2023 Summer Releases - ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..
சினிமா

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..