"தளபதி விஜயின் லியோ LCUல் உள்ளதை பிரபல இயக்குனர் உறுதி செய்கிறாரா?"- ட்ரண்டாகும் புகைப்படம் இதோ!

லியோ படப்பிடிப்பில் இருந்து ரத்னகுமார் வெளியிட்ட புகைப்படம்,rathnakumar photo from thalapathy vijay in leo shoot gives lcu hint | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றும், லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னதாக மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களிலும் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக கைதி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCUல் இருப்பதால் தளபதி விஜய்யின் லியோ திரைப்படமும் LCUல் இடம்பெருமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். லியோ திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவிலேயே ரசிகர்கள் பலவிதமான கனெக்சன்களை குறிப்பிட்டு லியோ திரைப்படம் இடம்பெறும் என தெரிவித்த நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தற்போது பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு அதனை இன்னும் உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

காஷ்மீரில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், ஒரு கூலிங் கிளாஸின் உடைந்த பாகத்தோடு வெளியிட்டுள்ள புகைப்படம் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானம் கதாப்பாத்திரத்தின் உடைந்த கண்ணாடியை நினைவுபடுத்துவது போல இருப்பதாக குறிப்பிட்டு கட்டாயமாக லியோ திரைப்படம் இடம் பெறும் என ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த இன்னும் நம்ப தகுந்த அல்லது அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமாரின் அந்தப் பதிவு இதோ…
 

Never say die 👊#Leo#Kashmir#ShootingDiaries pic.twitter.com/91lnvpTR0Q

— Rathna kumar (@MrRathna) February 19, 2023

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!
சினிமா

மறைந்த மயில்சாமியின் கடைசி டப்பிங்... ரசிகர்களின் மனதை உருக்கும் வீடியோ இதோ!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா திடீரென காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா திடீரென காலமானார்! சோகத்தில் திரையுலகம்

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி! வீடியோ இதோ
சினிமா

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி! வீடியோ இதோ