ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - வைரலாகி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - Famous Jackson Durai Movie Team announces to make Part 2 | Galatta

கடந்த 2011 ம் ஆண்டு ராகாவ லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காஞ்சனா'. நகைச்சுவை கலந்த பேய் படங்களை கொடுத்து மெகா ஹிட் கொடுத்த திரைப்படம் இது. இதன் தொடர்ச்சியாக பேய் படங்களுக்கான கதைக்களங்களே அதிகம் தமிழ் சினிமாவில் வந்த வண்ணம் இருந்தது. அதில் பெரும்பாலானவை தோல்வி படங்களாகவே அமைந்தது. இந்த தோல்வி படங்களில் இருந்து சற்று விலகி வித்யாசமான கதைகளத்தை அணுகி மக்களை கவர்ந்த திரைப்படம் ஜாக்சன் துரை. முதல் முதலில் நடிகர் சத்தியராஜ் பேய் வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தியே படத்திற்கு மிகப்பெரிய பலம். ஜாக்சன் துரை படத்தில் சத்தியராஜ் உடன் இணைந்து கதாநாயகனாக அவரது மகன் சிபி சத்தியராஜ் இப்படத்தில் நடித்தார். இவர்களுடன் இணைந்து பிந்து மாதவி, யோகி பாபு, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், சக்காரி காபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தரணிதரன் இயக்கத்தில் வெளியான ஜாக்சன் துரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிக்கவும் வைத்தது. வசூல் ரீதியாக பெருமளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து நல்ல வரவேற்பு பெற்றது.

JACKSON DURAI
The Second Chapter

THIS TIME MUCH BIGGER AND STRONGER.

Starring - SIBIRAJ and SATHYA RAJ

Written and directed by
P.V.Dharanidharan

Produced by@SriGreen_Offl @Sibi_sathyaraj@samyukthavv@Dharanidharanpv
@sidvipin #JDsecondchapter pic.twitter.com/78MOyTfTEX

— SriGreen Productions (@SriGreen_Offl) February 20, 2023

இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனம் புது போஸ்டருடன் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்யாயம்’என்று பெயரிட்டுள்ளனர். அதன்படி ஜாக்சன் துரை திரைப்படத்தில் மீண்டும் அசத்தலான சத்யராஜ், சிபி சத்யராஜ் கூட்டணி அமையவுள்ளது.

prabhu deva in bagheera movie new release date announcementஇப்படத்திற்கு ‘இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்  இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் கல்யான் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தரணிதரன் இயக்கவுள்ள ஜாக்சன் துரை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி, கன்னடா ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டர் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகின்றது. தற்போது தரணிதரன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் ‘ரேஞ்சர்’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

2023 Summer Releases  - ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

2023 Summer Releases - ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள்.. பட்டியல் இதோ..

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..
சினிமா

3 வது வாரத்தில் ‘ரன் பேபி ரன்’.. நெகிழ்ச்சியில் படக்குழு.. - வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் பதிவு இதோ..

முதல் முதலில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மலையாள டைட்டிலை வெளியிட்ட படக்குழு -  வைரலாகும் அறிவிப்பு இதோ.
சினிமா

முதல் முதலில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மலையாள டைட்டிலை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் அறிவிப்பு இதோ.